Check Actor Karthi Biography in Tamil (Biodata)

Read Actor Karthi Biography in Tamil (Biodata) on e akhabaar, Translations and Full wording of song Actor Karthi Biography in Tamil (Biodata)

நடிகர் கார்த்தி சிவகுமாரின் வாழ்க்கை வரலாறு

Name Karthi
Born Name Karthi
Age 44 (25 May, 1977)
Occupation Actor
Parents Name Sivakumar (Father)

Lakshmi (Mother)

Spouse Name Ranjani
Children Umayaal (Daughter)

Kandhan (Son)

கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.

Actor Karthi Childhood Days in Tamil

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

Actor Karthi Marriage Life in Tamil

இவரது திருமணம் திரு சின்னசாமி – ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், 3 சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகளும் கந்தன் என்ற ஒரு மகனும் உண்டு.

Actor Karthi Entry in Cini Field in Tamil

இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 2005 ஆம் ஆண்டு வெளியிடப்படுமென அறிவித்து நிதி பிரச்சனை காரணமாக சனவரி 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியை அடைந்தது.

அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது.

அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் மற்றும் கைதி போன்ற படங்கள் அவருக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத்தந்தது. ஹச் வினோத்  இயக்கத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரும் வெற்றியடைந்தது.

கார்த்தி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Karthi Social Activities in Tamil

கார்த்தி நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமான தீரன் அதிகாரம் ஒன்று க்கு பிறகு காவலர்கள் நலம் கருதி ஒரு அறக்கட்டலையை நிறுவியுள்ளார். அதன் துவக்கவிழாவில் உரையாற்றிய கார்த்தி “சம்பளத்திற்காக என்று இல்லாமல் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் காவல்துறை பணி செய்ய முடியும். நேர்மையாக உழைத்ததற்கு இந்த சமூகம் என்ன செய்தது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோன்றி விடக்கூடாது. நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு இதுபோன்ற அறக்கட்டளை தேவை என்றார்.

காவலர்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நேர்மையாக இருப்பதற்கு இங்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும், ‘தீரன்’ படத்திற்கு பிறகு காவலர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்த அறக்கட்டளை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியவர், தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்குமான அறக்கட்டளையாக இது செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Actor Karthi Flim List in Tamil

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2007 பருத்தி வீரன் பருத்தி வீரன்
2010 ஆயிரத்தில் ஒருவன் முத்து
2011 பையா சிவா
2011 நான் மகான் அல்ல ஜீவா பிரகாசம்
2011 சிறுத்தை ரத்னவேல் பாண்டியன், ராக்கெட் ராஜா
2011 கோ கார்த்திக் சிவகுமார்
2012 சகுனி கமலக்கண்ணன்
2013 அலெக்ஸ் பாண்டியன் அலெக்ஸ் பாண்டியன்
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா அழகுராஜா
2013 பிரியாணி சுகன்
2014 மெட்ராஸ் காளி
2015 கொம்பன் கொம்பையா பாண்டியன்
2016 தோழா சீனு
2016 காஷ்மோரா காஷ்மோரா, ராஜ் நாயக்
2017 காற்று வெளியிடை வருண் சக்கரபாணி
2017 தீரன் அதிகாரம் ஒன்று தீரன் திருமரன்
2018 கடைக்குட்டி சிங்கம் குணசிங்கம்
2019 தேவ் தேவ் ராமலிங்கம்
2019 கைதி தில்லி
2019 தம்பி விக்கி, சரவணன்
2023 சுல்தான் அமிதாப் குமாரசாமி
2023 பொன்னியின் செல்வன் —-

Actor Karthi Awards and Recognition

இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.

Actor Karthi Social Media Link

Reference: Wikipedia

Submit the Corrections in Actor Karthi Biography in Tamil (Biodata) at our page