Read நல் முத்து மணியோடு | nalmuthu maniyodu song lyrics tamil Pdf

Check நல் முத்து மணியோடு | nalmuthu maniyodu song lyrics tamil from Religious section on e akhabaar

நல் முத்து மணியோடு

ஒளி சிந்தும் மாலை

நவரத்ன‌ ஒளியோடு

சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை

அய்யனின் கடைக்கண்ணில்

அன்பெனும் மாலை

அழுதையில் குளித்திடும்

அழகுமணி மாலை…

பம்பையில் பாலனின்

பவள‌மணி மாலை…

ஐந்து மலை வாசனின்

அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்

அருள் கொஞ்சும் மாலை

ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை

கன்னியின் கழுத்தினில்

அரங்கேறும் மாலை

முத்தோடும் மணியோடும்

முழங்கிடும் மாலை

முக்கண்ணன் மகனான‌

மணிகண்டன் மாலை — கழுத்தோடு உறவாடும்

காந்தமலை மாலை ..

காண‌வரும் பக்தர்க்கு

காட்சிதரும் மாலை…

Post your comments about நல் முத்து மணியோடு | nalmuthu maniyodu song lyrics tamil below.