Read Shyamala dandakam lyrics in tamil | சியாமளா தண்டகம் பாடல் வரிகள் information

Author:

Check Shyamala dandakam lyrics in tamil | சியாமளா தண்டகம் பாடல் வரிகள் from Religious bhajan section on e akhabaar

சியாமளா நவராத்திரி ஸ்பெஷல் ! – சியாமளா தண்டகம் (Shyamala Dandakam Lyrics)

மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்தோத்ரம் , சியாமளா தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்


மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்


மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்


மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி 1

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி


வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்.

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே


குசோன்னதே குங்குமராகசோணே


புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண


ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத: 2

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ


குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப


வனவாஸினீ


ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே 3

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).

வளரும் …..

வசந்த பஞ்சமி

சியாமளா நவராத்திரி

சியாமளா நவராத்திரியில் தாம்பூலம் கொடுப்பதால் என்ன பலன்

Post your comments about Shyamala dandakam lyrics in tamil | சியாமளா தண்டகம் பாடல் வரிகள் below.