Read Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ on e akhabaar, Translations and Full wording of song Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ
Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)
1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு
2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு
3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு
The post
Submit the Corrections in Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ at our page