Read கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌ Pdf

Check கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌ from Religious section on e akhabaar

கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌


கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்


அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க‌


ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்

குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு


இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2

ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு


யாத்திரையாக‌ வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை


தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2

எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு


பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா x2

காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு


கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா x2


பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு x2


நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா


பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி


கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா x2

மகர‌ ஜோதியைக் கண்டு மனமார‌ சரணம் போட்டு


மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா


சாமியே சரணம் x3…சாமியே …. சரணம் ..x2

Post your comments about கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌ below.